கற்றல் குறைபாடு காரணமாக பட்டப்படிப்பு சான்றிதழ் நிறுத்தி வைப்பு: ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கற்றல் குறைபாடு காரணமாக பட்டப்படிப்பு சான்றிதழ் நிறுத்தி வைப்பு:  ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கற்றல் குறைபாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்பு சான்றிதழை உரியவரிடம் நான்கு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என மும்பை ஐஐடி நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘டிஸ்கால்குலியா’ என்ற கற்றல் குறைபாட்டால் மும்பையைச் சேர்ந்த நமன் வர்மா என்பவர் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு முதுநிலை டிசைன் பாடத்தில் சேர்வதற்காக மும்பை ஐஐடியில் விண்ணப்பித்திருந்தார். இவரது உடல் நிலையைக் காரணம் காட்டி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 226-ன் படி தன்னை ஐஐடியில் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து ஐஐடி மும்பையில் டிசைன் பாடப்பிரிவில் நமன் வர்மா சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவரும் 2018-ம் ஆண்டு தனது டிசைன் பாடப்பிரிவை முடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு பட்டம் வழங்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கைவிரித்து விட்டது. இதையடுத்து தனக்கு பட்டம் வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறு நமன் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட சட்டப் பிரச்சினைகளில் உயர் நீதிமன்றம் எடுத்த பார்வையை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மேல்முறையீடு செய்பவர் படிப்பை முடித்துவிட்டார் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, அவரது மனுவை ரத்து செய்ய நாங்கள் வற்புறுத்தவில்லை. பட்டம் பெறும் தகுதி அவருக்கு இருக்கிறது. ஆனால், அவரின் தகுதி ஆபத்தில் உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம் நான்கு வாரங்களுக்குள் மேல்முறையீட்டாளர் நமன் வர்மாவிற்கு பட்டம், சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் ஒப்படைக்க வேண்டும் ” என உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in