பாலியல் புகாரில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

பாலியல் புகாரில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

பாலியல் புகாரில் சிக்கிய அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லில்லி(33). இவர் நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நெட்டவேலம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மோகன்தாஸ் என்பவர் மீதும், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக ஆசிரியை லில்லி மீதும் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் என தனக்கு நெருக்கமானவர்களைச் சந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில், மண்ணச்சநல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று லில்லி சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த மணச்சநல்லூர் போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லில்லியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in