செஸ் போட்டியில் சாதித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்: பெங்களூருக்கு விமானத்தில் பறக்க வைத்து ஊக்கமூட்டிய அரசு

செஸ் போட்டியில் சாதித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்: பெங்களூருக்கு விமானத்தில் பறக்க வைத்து ஊக்கமூட்டிய அரசு

பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 100 அரசுப்பள்ளி மாணவ-மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னையிலிருந்து பெங்களூரு வரை சிறப்பு விமானத்தில் சென்று வரும் நிகழ்வை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

“சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையே சதுரங்கம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடைபெறும். பல்வேறு நிலைகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படுவார்கள். இதற்காக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது” எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். 1 - 5, 6 - 8, 9 -10, 11 - 12 ஆகிய வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக செஸ் போட்டிகள் நடைபெற்றன. மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 152 மாணவ-மாணவியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்லவும், விமானத்தினுள் சிறப்புச் சதுரங்கப் போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 'இது நம்ம சென்னை' என செஸ் லோகோவுடன் விமானம் அலங்காரம் செய்யப்பட்ட விமானத்தைச் சிவப்பு துணியால் மறைத்து வைத்திருந்தனர். மாணவர்களின் விமானப் பயணத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், வீ.மெய்யநாதன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மாணவர்கள் குஷியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in