7 மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு!

7 மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழ்நாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற வேண்டும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் பணியாற்றவே பெரும்பாலான அரசு ஊழியர்கள் விரும்புகிறார்கள். இதனால் கிராமப்புறங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் கிராமத்தில் உள்ளவர்களும் நகரத்தை நோக்கிப் படையெடுக்க நேரிடுகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கிராமங்களில் பணிபுரிய விரும்புவதில்லை. அதிலும் மலைக் கிராமங்கள் என்றால் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கிராமத்தில் பணியாற்றுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் பணிபுரிய ஆசிரியர்கள் தயங்குவதால், மலையின் மேல் பகுதியிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in