போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை: காப்பு மாட்ட காவல்துறை தேடுகிறது

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுபள்ளி ஆசிரியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை போலீஸார் தேடிவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியில் நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு ராசாத்தி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்வித்துறை அதிகாரிகளும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் போலியான கல்விச்சான்றிதழ் கொடுத்து ராசாத்தி பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடந்ந்து போலியான கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஆசிரியை ராசாத்தி மீது காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு பயந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை ராசாத்தி தலைமறைவானார்.

போலீஸார் மாயமான ராசாத்தியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அதேபோல் அரசுப்பணியில் சேரும் போதே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டே சேர்க்கப்படும் நடைமுறை உள்ளது. அப்படியிருக்கும் போது ராசத்தி சான்றிதழ் சரிபார்ப்பில் எப்படி முறைகேடு செய்தார்? அல்லது அவருக்கு வேறுயாரும் உதவினார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in