மீண்டும் அதிகரிக்கும் கரோனா: தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

மீண்டும் அதிகரிக்கும் கரோனா: தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், மிசோரம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிலைமையை மத்திய சுகாதாரத் செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆய்வு செய்தார்.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த 9 மாநிலங்களில் சோதனையை மேம்படுத்தவும், கண்காணிப்பை அதிகரிக்கவும் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த ஒன்பது மாநிலங்களில் மாவட்ட வாரியாக கடுமையான சுவாச நோய் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பாதிப்புகளை தினசரி அடிப்படையில் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்பது மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நடத்திய உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, “இந்த 9 மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரிப்பு அல்லது நேர்மறை விகிதம் அதிகரிப்பு ஆகியவை பதிவாகியுள்ளது” என்று சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. .

மொத்தத்தில், இந்த 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், “கரோனா பாதிப்பு நீங்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகளாவிய சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல மாநிலங்களின் மோசமான கண்காணிப்பு, மோசமான சோதனை மற்றும் சராசரிக்கும் குறைவான தடுப்பூசிகள் செலுத்தியது ஆகியவையே தற்போது பாதிப்பு அதிகரிக்க காரணம்”என்று குறிப்பிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in