முல்லை பெரியாறு அணையை வடிவமைத்தவர்: பென்னி குயிக் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!

முல்லை பெரியாறு அணையை வடிவமைத்தவர்: பென்னி குயிக் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!

முல்லை பெரியாறு அணையை வடிவமைத்த பொறியாளர் பென்னி குயிக்கின் 182வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் பாசன வசதி, குடிநீர் ஆதாரமான முல்லை பெரியாறு அணையை வடிவமைத்த ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்கின் பிறந்த தினம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜன.15ல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 182வது பிறந்த தினத்தையொட்டி, தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னி குயிக் சிலைக்கு தமிழக அரசு சார்பில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர் முரளிதரன், எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி மகாராஜன், சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in