ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்: சத்தீஸ்கர் விவசாயிகளுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்!

ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்: சத்தீஸ்கர் விவசாயிகளுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்!

சத்தீஸ்கரில் ஜூலை 28-ம் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து பசு கோமியத்தை ஒரு லிட்டர் 4 ரூபாய்க்கு வாங்கும் திட்டம் தொடங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கோதான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை வளர்ப்போர்களிடம் இருந்து மாட்டு சாணம் அரசால் வாங்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் உள்ளூர் பண்டிகையான ஹரேலி திருவிழா ஜூலை 28-ம் தேதி நடக்கிறது. அன்று முதல், பசு கோமியத்தை லிட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவில் வாங்கும் திட்டம் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் கால்நடைகள் வளர்ப்போர் தொடர்பான இரண்டு அமைப்புகள் மூலம் கோமியம் வாங்கப்படும். உள்ளூர் அளவில் கோமியத்திற்கான விலையை அந்த குழுக்களே நிர்ணயம் செய்யும் என அரசு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சமாக ஒரு லிட்டர் பசு கோமியம் ரூ.4 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். கோமியம் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in