புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசையின் பாதம் தடுக்கிய தரை விரிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தின் நிகழ்வொன்றில் பங்கேற்க வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சிறு இடர்பாட்டினை எதிர்கொண்டு மீண்டதில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பட்டிப்புலம் கிராமத்தில் ஹைபிரிட் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை வந்திருந்தார். அப்போது நுழைவாயிலில் விரிக்கப்பட்ட பச்சை கம்பளத்தில் பாதம் இடறியதில் தடுமாறி விழுந்தார். அருகிலிருந்தோர் உதவியுடன் சமாளித்து எழுந்தவர், அந்த சிரமம் ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாது, பின்னர் அங்கிருந்த மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடினார்.

தடத்தில் விரிக்கப்பட்டிருந்த பச்சை கம்பளங்கள் முறையாக அமைக்கப்படாத காரணத்தினால், இந்த அசவுகரியம் நிகழ்ந்ததாக தெரிகிறது. நல்வாய்ப்பாக தமிழிசை எந்தவொரு பாதிப்பும் இன்றி சமாளித்து, இயல்புக்கு திரும்பினார். இதனால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in