'அக்னிபத்' திட்டத்திற்கு ஆதரவாக தமிழக ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம் கண்டனம்!

'அக்னிபத்' திட்டத்திற்கு ஆதரவாக தமிழக ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம் கண்டனம்!

'அக்னிபத்' திட்ட விவாதத்தில் தமிழக ஆளுநர் பங்கேற்பதற்கு இடமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்திய ராணுவத்தில் இளைஞர் சமுதாயத்திற்கு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் தேசிய தலைமைக்கு நன்றி" என்று இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: 'அக்னிபத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும், வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்சினைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுநர் பங்கேற்பதற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்..

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in