அரசுப் பள்ளி மாணவர்களே! காலை சிற்றுண்டி பணிகள் தயார்... விரைவில் சாப்பிடலாம்!

அரசுப் பள்ளி மாணவர்களே! காலை சிற்றுண்டி பணிகள் தயார்... விரைவில் சாப்பிடலாம்!

அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டப் பணிகளை தொடங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். தற்போது அதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதில், முதலில் 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில், பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படவுள்ளது என்றும் அதன் பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், சமையல் எரிவாயுக்கள், எரிவாயு ஸ்டவ் போன்றவை வழங்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் காலை 5.30 மணிக்கு தொடங்கி 7.45 மணிக்குள் சமையல் பணியை முடிக்க வேண்டும் என்றும் சமைத்த உணவை காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in