சுற்றுலா அழைத்துச் சென்ற இடத்தில் தலைமை ஆசிரியர் வெறிச்செயல்: போதை மருந்து கொடுத்து 17 வயது மாணவி பலாத்காரம்

சுற்றுலா அழைத்துச் சென்ற இடத்தில் தலைமை ஆசிரியர் வெறிச்செயல்: போதை மருந்து கொடுத்து 17 வயது மாணவி பலாத்காரம்

சுற்றுலா அழைத்துச் சென்ற இடத்தில் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 9 மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் நவ.23-ம் தேதி பிருந்தாவன் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக ஓட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் எட்டு மாணவியரும், மற்றொரு அறையில் 17 வயதுடைய பிளஸ் 1 மாணவியுடன் தலைமை ஆசிரியர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மாணவி;ககு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை தடுத்த மாணவியைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நவ.24-ம் தேதி மாணவிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்த விஷயத்தை பயந்து கொண்டு உடனடியாக பிளஸ் 1 மாணவி பெற்றோரிடம் சொல்லவில்லை.

ஆனால், சில நாட்களில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, சுற்றுலா சென்ற இடத்தில் தலைமை ஆசிரியர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர், ஹஸ்தினாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக , தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவானார். அவரைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீரட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in