அரசின் பொங்கல் பரிசு இனிக்கவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாததால் அரசின் பொங்கல் பரிசு இனிக்கவில்லை என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து த.மா.கா தலைவர் ஜிகே வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “ரொக்கத்துடன் பொங்கல் பரிசு அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால் இது போதுமானதாக இல்லை. தமிழர்களின் தலையாய பண்டிகை பொங்கல். அதுவும் விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சிதரும் பண்டிகை இது. இந்த பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவை அறிவித்து இருந்தாலும், அதில் கரும்பு சேர்க்கப்படாததால் அரசின் பொங்கல் பரிசு இனிக்கவில்லை.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்தால் மக்கள் மகிழ்வார்கள். அதை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்தால் விவசாயிகளும் மகிழ்வார்கள். கூடவே இதனால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் இருந்து அதிக விலை கொடுத்து கரும்பு வாங்கும் சூழலும் எழாது. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையையும் ஆயிரம் ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in