நிதி நெருக்கடியில் தவிக்கும் போக்குவரத்து கழகம்: தமிழக அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

நிதி நெருக்கடியில் தவிக்கும் போக்குவரத்து கழகம்: தமிழக அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

போக்குவரத்துத் துறையில் வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையைக் குறைக்க ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் நிதிச்சுமையில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தியது. இதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சமாளிக்கும் வகையில் பேருந்துகளில் விளம்பரங்கள், விரைவுப் பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி, ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் கட்டணம் குறைவு எனப் பல்வேறு யுக்திகளைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாய் அதிகரிக்கவும் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "14-வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு 10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு 3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள 6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும். பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாயை அதிகரிக்கவும் நிதிச்சுமையைக் குறைக்கவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in