50 ஆயிரம் ரூபாயுடன் 7 கள்ளநோட்டுகள்; கண்டுபிடித்த வங்கி ஊழியர்: கேரளாவில் சிக்கிய அரசு பெண் அதிகாரி

கைது -சித்தரிப்பு
கைது -சித்தரிப்பு50 ஆயிரம் ரூபாயுடன் 7 கள்ளநோட்டுகள்; கண்டுபிடித்த வங்கி ஊழியர்: கேரளாவில் சிக்கிய அரசு பெண் அதிகாரி

கேரளத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட பெண் அரசு அதிகாரியைப் போலீஸார் கைது செய்தனர். இவர் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்தில் இருந்தவர் ஆவார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வியாபாரி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தன் வங்கிக் கணக்கில் போட்டார். அப்போது அதில் சில தாள்களில் லேசான மாறுபாட்டை உணர்ந்த வங்கியினர் அதை சோதனை செய்தனர். அப்போது அதில் ஏழு தாள்கள் கள்ளநோட்டாக இருந்தன. இதுகுறித்து வங்கித்தரப்பில் போலீஸாருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. ஆலப்புழா போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த கள்ளநோட்டுகளை எடத்துவா பகுதியைச் சேர்ந்த பெண் வேளாண் அலுவலர் ஜிஷா மோல்(39) என்பவர் கொடுத்தது தெரியவந்தது.

அதேநேரம் ஜிஷா மோல், தவறுதலாகவோ, அறியாமலோ இதைக் கொடுக்கவில்லை எனவும் அவர் கள்ளநோட்டு எனத் தெரிந்தே புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜிஷா மோலை போலீஸார் கைதுசெய்தனர். ஏற்கெனவே இவர் விமானத்துறையில் பணிசெய்து, அதன் பின்னர் கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வென்று வேளாண் அதிகாரி ஆனவர். அதனால் அவருக்கு அப்போதே ஏதாவது கள்ளநோட்டுக் கும்பலோடு பழக்கம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இதேபோல், ஏற்கெனவே இவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவுசெய்த ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இப்போது கள்ளநோட்டு மோசடி வழக்கிலும் சிக்கிய நிலையில் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in