சாலையில் வீசப்பட்ட ஆண் சிசு; அரசு செவிலியர் கைது: நடந்தது என்ன?

இறந்த ஆண் சிசுவை சாலையில் வீசிய  செவிலியர் கைது
இறந்த ஆண் சிசுவை சாலையில் வீசிய செவிலியர் கைது சாலையில் வீசப்பட்ட ஆண் சிசு; அரசு செவிலியர் கைது: நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலையோரம் ஆண் சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ளது அணையப்பபுரம். இங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் கடந்த 23-ம் தேதி, பிறந்து சில மணிநேரங்களேயான ஆண் குழந்தை ஒன்று சடலமாகக் கிடந்தது. அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. இதைப் பார்த்து அந்த வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீஸார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்பதால் கொன்று வீசியிருக்கலாமா அல்லது குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையா எனவும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் போலீஸாரின் தொடர் விசாரணையில் ஆண் சிசுவைக் கொன்றது மூலக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இருக்கும் தனலெட்சுமி(23) என்பது தெரியவந்தது. இவர் தனது கல்லூரித் தோழரான மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த இசக்கித்துரை(24) என்பவரைக் காதலித்து உள்ளார். இதனால் தனலெட்சுமி கர்ப்பமானார். இதை ரகசியமாக வைத்து உள்ளார். பிரசவ வலி வந்ததும் தன் காதலன் இசக்கிதுரையிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரும், அவரது தாய் ராசமணியும் தனலெட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்வழியிலேயே அணையப்பபுரம் பகுதியில் வரும்போது குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையை அங்கேயே தூக்கி வீசியுள்ளனர். இவ்விவகாரத்தில் அரசு செவிலியர் தனலெட்சுமியைக் கைது செய்த போலீஸார், தலைமறைவான இசக்கிதுரை, தனலெட்சுமி ஆகியோரைக் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in