பைக் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து; துடிதுடித்து பலியான ரியல் எஸ்டேட் அதிபர்

பலியான கண்ணன்
பலியான கண்ணன்பைக் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து; துடிதுடித்து பலியான நபர்!

திருவள்ளூரில் சாலையை கடக்க முயன்ற வாகன ஓட்டி மீது அரசு பேருந்து மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணனின் உறவினர்கள் அரசு பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை சாலையின் நடுவே போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in