மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பினார் கோத்தபய: கடைசி நேரத்தில் கிடைத்த அனுமதி

மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பினார் கோத்தபய: கடைசி நேரத்தில் கிடைத்த அனுமதி

இன்று பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் கோத்தபய அங்கிருந்து தப்பினார். உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து தங்கள் கோபத்தை தணித்துக் கொண்டனர். அங்கிருந்த உணவு பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்ச எங்கு இருந்தால் என்பது தெரியாமல் இருந்தது.

இதனிடையே, அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டதாக செய்திகள் வெளியானது. அதே நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தால் தனக்கு பாதுகாப்பு கிடைக்காது என்று கருதிய கோத்தபய தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் நேற்று இரவு மாலத்தீவு தப்பி சென்றுள்ளார். சிறிய ரக ராணுவ விமானத்தில் சென்ற கோத்தபய மாலத்தீவில் இறங்க முதலில் அனுமதி கிடைக்கவில்லையாம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நேற்று முன்தினமே கோத்தபய துபாய் தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும் ஆனால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் மாலத்தீவு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனிடையே, கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச அமெரிக்க தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in