2-வது திருமணம் செய்து கொண்டேன், தேடி வரவேண்டாம்: கணவருக்கு வாட்ஸ் அப்பில் மாலையும், கழுத்துமாக புகைப்படம் அனுப்பிய மனைவி

வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படம்.
வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படம்.

நான் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் என்னைத் தேடி வரவேண்டாம் என்று கணவருக்கு வாட்ஸ் அப்பில் 2-வது திருமணப் புகைப்படத்தை மனைவி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே எட்டிகுளத்துபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த்(30). இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீரஅழகு என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வீரஅழகு சென்று விட்டார். இந்த நிலையில் திடீரென ஆனந்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீரஅழகு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதைக் கண்டு ஆனந்த் அதிர்சியடைந்தார்.

அதில், தனது மனைவி வீரஅழகு வேறு ஆணுடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் இருந்தது. அத்துடன் ''நான் வேறொருவரை திருமணம் கொண்டேன். எனவே, என்னைத் தேடி வர வேண்டாம்'' என்று வீரஅழகு மெசேஜ் அனுப்பியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த், தனது மனைவி வீரஅழகுவை மீட்டுத்தரும்படி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in