ஒரே வாரத்தில் 18 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: சென்னை காவல்துறை அதிரடி!

ஒரே வாரத்தில் 18 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: சென்னை காவல்துறை அதிரடி!

சென்னையில் கடந்த ஒரு வாரக் காலத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கட்டுப்படுத்தும் விதமாக முக்கிய குற்றவாளிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 408 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்னடத்தை காரணமாகச் சிறையிலிருந்து வெளியே வந்தவர்களில் ஏழுபேர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் கடந்த ஒருவாரத்தில் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா என்பவரை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஷ் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in