பொறியாளர் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 2 கோடி அனுப்பிய கூகுள் நிறுவனம்: பணம் பெற்றவர் போட்ட ட்விட்டால் ஆச்சரியம்

பொறியாளர் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 2 கோடி அனுப்பிய கூகுள் நிறுவனம்: பணம் பெற்றவர் போட்ட ட்விட்டால் ஆச்சரியம்

கூகுள் நிறுவனத்திடமிருந்து தவறுதலாக வந்த சுமார் 2 கோடி ரூபாய் பணத்தைப் பெற்ற பொறியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் கெர்ரி. இவரது வங்கிக்கணக்கு அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்திடமிருந்து தவறுதலாக 2 லட்சத்து 50 டாலர்கள் பணம் வந்தது. இதனைக்ண்டு ஆச்சரியமடைந்த கெர்ரி, எதற்காக கூகுள் நிறுவனம் தனக்கு பணம் அனுப்பியது எனறு தெரியவில்லை என ட்விடடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை தன்னை கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும், பணத்தைத் திரும்பப் பெற விருப்பம் இல்லையென்றால் சந்தோஷம் தான் என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 2 லட்சத்து 50 டாலர்கள் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதனைத் திரும்ப பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தவறுதலாக வந்த பணம் குறித்து வெளிப்படையாக ட்விட்டரில் தெரிவித்த கெர்ரியின் செயலுக்குப் பலர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in