கூகுள் பே மூலம் பர்னிச்சர் கடைக்காரரிடம் நூதன மோசடி

மோசடி
மோசடிகூகுள் பே மூலம் பர்னிச்சர் கடைக்காரரிடம் நூதன மோசடி

அலைபேசி மூலம் அழைத்து தன்னை ராணுவ வீரர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், கூகுள் பே மூலம் 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(52), இவர் அங்கு பர்னிச்சர் கடை நடத்திவருகின்றார். இவரது பர்னிச்சர் கடை அருப்புக்கோட்டை, விருதுநகரிலும் உள்ளது. இவரை அலைபேசியில் அழைத்த நபர் ஒருவர் தன் பெயர் சாகில்குமார் எனவும், தான் ராணுவ வீரர், காஷ்மீரில் இருந்து பேசுவதாகவும் கூறினார். அவர் தன் நண்பரின் வீடு பால்காய்ச்சும் நிகழ்ச்சி அருப்புக்கோட்டையில் நடக்கிறது. அதற்கு பர்னிச்சர்கள் வாங்க வேண்டும் என மாடல்களை அனுப்பிக் கேட்டுள்ளார்.

அதை நம்பி கார்த்திகேயனும் மாடல்களை வாட்ஸ் அப்பில் புகைப்படங்களாக அனுப்பிவைத்தார். கடைசியில் மெத்தை, ஷோபா ஆகியவற்றை 65 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்க அலைபேசியில் பேசியவர் விருப்பம் தெரிவித்தார். இதற்கான பணத்தை செலுத்த ஜிபே எண்ணும் கேட்டார், அப்போது கார்த்திகேயன் தன் நடப்புக் கணக்கு எண்ணைக் கொடுத்தார். ஆனால் எதிர்முனையில் பேசியவர் தான் ராணுவ வீரர் என்பதால் நடப்புக் கணக்கில் பணம் அனுப்பக் கூடாது, ஜிபே எண் தான் வேண்டும் என்றார்.

இதனால் கார்த்திகேயன் தன் மகன் அருண்குமாரின் ஜிபே எண்ணை அனுப்பினார். அதற்கு ஒரு ரூபாயை அனுப்பிவிட்டு வந்துள்ளதா என உறுதிசெய்து கொண்டார் சாகில்குமார். தொடர்ந்து அந்த எண்ணுக்கு ஒரு லிங்கை அனுப்பினார். அந்த லிங்கைக் க்ளிக் செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என அவர் சொல்ல, அதை நம்பி கார்த்திகேயனின் மகன் அருண்குமாரும் க்ளிக் செய்தார். அப்போது இவர்கள் கணக்கில் இருந்து 65 ஆயிரம் ரூபாய் போய்விட்டது. தொடர்ந்து வேறு, வேறு தொகை போட்ட லிங்க்களையும் அனுப்பிக் கொண்டே இருந்தார் சாகில்குமார். இதுகுறித்து கார்த்திகேயன் தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாருக்கு புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in