பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: அரையாண்டு விடுமுறை இத்தனை நாட்களா?

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: அரையாண்டு விடுமுறை இத்தனை நாட்களா?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை உயர், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 5 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாள்களைப் பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் டிச. 24-ம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டு 2023 ஜன. 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in