நகைப்பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தி: தங்கத்தின் விலை குறைந்தது

நகைப்பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தி: தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சரவனுக்கு இன்று 128 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனளர். அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது.

இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,685 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் ரூ.0.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 58.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in