சென்னை விமான நிலைய கழிவறையில் கிடந்த 60.67 லட்சம் தங்கம்: அதிர்ந்த அதிகாரிகள்

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம் சென்னை விமான நிலைய கழிவறையில் கிடந்த 60.67 லட்சம் தங்கம்: அதிர்ந்த அதிகாரிகள்

விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60.67 லட்சம் மதிப்பிலான 1240 கிராம் 24 கேரட் சுத்த தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகளுடன் விமானம் வந்துள்ளது. இந்த நிலையில் அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து விமானத்தை சோதனை செய்த அதிகாரிகள் கழிவறையில் கருப்பு டேப்பால் பொதியப்பட்ட பொட்டலம் கிடந்துள்ளது. அதனை எடுத்து சோதனை செய்த அதிகாரிகள் 60.67 லட்சம் மதிப்பிலான 1240 கிராம் 24 கேரட் சுத்த தங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து தங்கம் எப்படி கழிவறைக்கு வந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in