களிமண்ணில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்: மதுரை ஏர்போர்ட்டில் சிக்கிய சிவகங்கை வாலிபர்!

களிமண்ணில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்: மதுரை ஏர்போர்ட்டில் சிக்கிய சிவகங்கை வாலிபர்!

களிமண்ணில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாேடு, சிவகங்கை வாலிபரை கைது செய்தனர்.

கரோனா காலத்துக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கரத்துறை அதிகாரிகள் எந்நேரமும் உஷாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் உஷாரானார்கள். அப்போது, சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் களிமண் ஒன்று இருந்தது. அதை உடைத்துப் பார்த்தப்போது 617 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 90 ஆயிரம் மதிப்புள்ள ஐ போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கடத்தி வந்த சிவகங்கை சேர்ந்த காஜா அலாவுதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் அதன் பின்னர் காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in