எமர்ஜென்சி லைட்டிற்குள் இருந்த 1.8 கிலோ தங்கம்: சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் சிக்கிய பெண்!

எமர்ஜென்சி லைட்டிற்குள் இருந்த 1.8 கிலோ தங்கம்: சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் சிக்கிய பெண்!

எமர்ஜென்சி லைட்டிற்குள் வைத்து 1.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்த பெண்ணை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று நள்ளிரவில் ஏர் ஏசியா விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து, பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, பெண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளின் சந்தேகப் பார்வை விழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவர் கொண்டு வந்த சூட்கேஸ் ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் இருந்த புதிய எமர்ஜென்சி லைட் வழக்கத்தைவிட அதிக எடை கொண்டதாக இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த எமர்ஜென்சி லைட்டை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது 1.8 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்தப் பெண்ணை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 80 லட்சம் ஆகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in