மலக்குடலில் கிலோ கணக்கில் தங்கம்: சோதனையில் பதறிய சென்னை சுங்கத்துறை அதிகாரிகள்

மலக்குடலில் கிலோ கணக்கில் தங்கம்: சோதனையில் பதறிய சென்னை சுங்கத்துறை அதிகாரிகள்

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு மலக்குடலில் கிலோ கணக்கில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த 4 பேரை சுங்கத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா பாதிப்பை பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும் கும்பலின் நடவடிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் தொடர்ந்து தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. தங்கத்தை இப்படியெல்லாம் கடத்திக் கொண்டு வருவார்களா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, கடத்தல்காரர்கள் தங்கத்தை மலக்குடலில் மறைத்து வைத்துக் கடத்தி வந்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, பாங்காங், துபாய், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த சாகுல் அமீது, அருண்பாண்டியன், ரஷீத், பழனிசாமி ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் தங்கள் மலக்குடல் மற்றும் காலணிகளில் மறைத்துவைத்து 3.05 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.38 கோடி ஆகும். இதையடுத்து, பழனிசாமி, அருண்பாண்டியனை கைது செய்த அதிகாரிகள், சாகுல் அமீது, ரஷீத் ஆகியோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து மலக்குடலில் கிலோ கணக்கில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in