தங்கப்புதையல் ஆசைகாட்டி இரும்பு வியாபாரியிடம் மோசடி முயற்சி: வசமாக சிக்கிய இரு வாலிபர்கள்!

குற்றவாளிகள் கைது
குற்றவாளிகள் கைது

சென்னையில் பழைய இரும்புக் கடை வியாபாரியிடம் தங்கப் புதையல் ஆசைகாட்டி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காலடிபேட்டை காவேரிதெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(20) இவர் அப்பகுதியில் பழைய இரும்புக்கடை நடத்திவருகிறார். இவரிடம் இருவர் பழைய இரும்புகளை விலைக்கு போட வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் களிமண் எடுக்க சென்றபோது, தங்களுக்கு புதையல் கிடைத்ததாகவும் அதை விற்க வேண்டும் எனவும் கோரினர். உடனே பாலமுருகன் அவற்றைத் தானே வாங்கிக்கொள்வதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் பகுதிக்கு வந்த அவர்கள், புதையலை பணம் கொடுத்து பெற்றுச் செல்லும்மாறு பாலமுருகனிடம் கூறினர். பாலமுருகனும், அங்கே சென்றார். அப்போது இருவரும் அவரிடம் 2 கிலோ அளவுக்கு எடை உள்ள முத்துமாலை ஒன்றைக் கொடுத்தனர். அந்த முத்துமாலையைப் பார்த்ததும் சந்தேகம் அடைந்த பாலமுருகன் இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் அம்பேத்கர் நகர் 4வது தெருவைச் சேர்ந்த வீரு, அர்ஜூனன் எனத் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்த 2 கிலோ எடையுள்ள முத்துமாலையை சோதனை செய்தனர். அப்போது அது கவரிங் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in