எட்டாத உயரத்தில் தங்கம் விலை: மூன்று நாளில் 504 ரூபாய் உயர்ந்தது!

எட்டாத உயரத்தில் தங்கம் விலை: மூன்று நாளில் 504 ரூபாய் உயர்ந்தது!

தங்கம் விலை 3  நாளில் சவரனுக்கு 504 ரூபாய் உயர்ந்து சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக  ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. முதலில் சரிவைக் கண்ட தங்கம் விலை, தற்போது சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ம் தேதி ஒரு சவரன் 43,856 ரூபாய்க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை  கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

இந்தநிலையில், 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,537 ரூபாய்க்கும், சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,296 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

இந்தநிலையில் இன்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,360 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 504 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி  கிராமுக்கு 1.50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 81.30 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 81,300 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கவே இயலாத நிலை உருவாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in