சரிந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.280 குறைந்தது

சரிந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.280 குறைந்தது

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று குறைந்துள்ளது. இதன்படி சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் விலை குறைந்தது.

கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை வாரத்தின் துவக்க நாளான்று இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு . 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் .38,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, .1.20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 64.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை .64,800- ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in