தங்கம் விலையில் திடீர் சரிவு!

ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கம்
Updated on
1 min read

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 22), சவரனுக்கு ரூ.800 சரிவு கண்டுள்ளது.

தொடர்ந்து விலையேற்றம் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று திடீர் சரிவு கண்டுள்ளது, சாமானியர்கள் மத்தியில் ஆறுதல் தந்துள்ளது.

இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.43,760 என்றளவில் விற்பனையாகிறது. சர்வதேச அளவிலான பொருளாதார சுணக்கம் காரணமாக, பங்குச் சந்தைகள் தள்ளாடி வருகின்றன. பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளின் நிலையற்ற தன்மை காரணமாக, அவற்றிலிருந்து விலகி தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வோர் அதிகரித்து வருகின்றனர். மேலும் கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இயல்பாக தங்கத்தின் விலை தொடர் உயர்வு கண்டது.

இந்த விலையேற்றம் ஆபரணத் தங்கத்தின் விலையில் பிரதிபலித்ததில், அதற்கான சந்தையில் தொடர் உயர்வு கண்டு வந்தது. தற்போது பங்குச்சந்தைகள் இயல்புக்கு திரும்பி வருவதால் தங்கத்தின் விலை குறைவதற்கான போக்கு எட்டிப் பார்த்துள்ளது. அமெரிக்காவின் திவால் தத்தளிப்பில் இருக்கும் வங்கிகள் சிலவற்றை, மிகப்பெரும் வங்கிகள் வாங்க முன்வந்திருப்பது பங்குச்சந்தைகளின் மீட்சிக்கு வழி வகுத்திருக்கிறது. இதனால் தங்க முதலீடுகள் பங்குச்சந்தைக்கு மடைமாற்றப்படுவதன் தொடக்கமாக, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ800 குறைந்துள்ளது. ஆனால் இந்த போக்கு மேலும் தொடருமா அல்லது தங்கத்தின் விலை மீண்டும் உயருமா என்ற நிச்சயமின்மை தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in