தங்கத்தின் விலை திடீர் சரிவு: வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கத்தின் விலை திடீர் சரிவு: வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பது தங்கத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்திற்கான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 66.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in