தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தங்கம்
தங்கம்Hindu கோப்பு படம்

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 544 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 68 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 520 ரூபாயும், கிராமுக்கு 65 ரூபாயும் குறைந்தது. இந்த நிலையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 544 ரூபாயும், கிராமுக்கு 68 ரூபாயும் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் 4,672 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37,376 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்றும் இன்றும் மட்டும் தங்கத்தின் விலை 1,064 ரூபாய் சரிந்துள்ளது.

இதனைப்போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 62.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்தது. அதன்பின்னர் ஜூலை 1-ம் தேதி தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 107 ரூபாய் அதிகரித்தது. பிறகு சில நாட்கள் படிப்படியாக அதிகரித்த தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in