தாய்லாந்தில் இருந்து கடலில் மிதந்து வந்த தங்கத்தேர்: ஆந்திராவிற்கு கரை சேர்த்த அசானி புயல்!

தாய்லாந்தில் இருந்து கடலில் மிதந்து வந்த தங்கத்தேர்:
ஆந்திராவிற்கு கரை சேர்த்த அசானி புயல்!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சுன்னப்பள்ளி பகுதி கடலில் அசானி புயலால் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் இழுத்து வரப்பட்டது.

அந்தமானுக்கு மேற்கே வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, அசானி புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான கடற்பகுதிகளில் மிதமான மழையை கொடுத்துள்ளது.

இந்த புயல் ஒடிசாவை நோக்கி செல்வதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நேரடியாக ஆந்திராவை நோக்கி வருவதாக, பிற வெளிநாட்டு வானிலை ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சுன்னப்பள்ளி பகுதி கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் கடல் அலையில் இழுத்து வரப்பட்டது. மலேசியா அல்லது தாய்லாந்தில் செய்யப்படும் தங்கநிற தேர் போன்ற அமைப்பைக் கொண்டதை இந்த தேரை கிராம மக்கள் கயிறு கட்டி கரைக்குக் கொண்டு வந்தனர். அசானி புயலின் தாக்கத்தால் இந்த தேர் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த தேரைப் பார்க்க பக்கத்து கிராமங்களுக்கு ஏராளமானோர் ஸ்ரீகாகுளம் கடற்கரைப் பகுதியில் குவிந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி வட்டாட்சியர் சலமய்யா கூறுகையில்," இந்த தேர் எந்த வெளிநாட்டிலிருந்தும் வந்திருக்காது. இந்தியக் கடலோரப் பகுதியில் எங்கோ திரைப்படப் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in