
உலக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் தமிழத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்.
தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று துப்பாக்கி சுடுதலில் நாட்டிற்காக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் உலக பல்கலைக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்க பதக்கத்தை தட்டி சென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற இளவேனில் 252.5 புள்ளிகள் பெற்று இந்த போட்டியின் முதல் பதக்கத்தை நாட்டிற்கு பெற்றுத்தந்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த இதே போட்டியில் தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், குழு போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று தந்த இளவேனிலின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் சார்பில் 250 வீரர்கள் பங்கேற்ற இந்த விளையாட்டு போட்டியில் முதல் தங்க பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை துவக்கியுள்ளது இந்தியா.