குல்லா, கையுறையுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்: 30 லட்சம் தங்கம், வைர நகைகள் அபேஸ்

சித்தரிக்கப்பட்ட படம்
சித்தரிக்கப்பட்ட படம்குல்லா, கையுறையுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்: 30 லட்சம் தங்கம், வைர நகைகள் அபேஸ்

சிவகாசி அருகே பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்துராஜபுரம், தேவி நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் தனது குடும்பத்தாருடன் கடந்த 23-ம் தேதி திருப்பதி சென்றார். நேற்று இவர் வீடு திரும்பியபோது, கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த 90 பவுன் தங்க நகை, வைர நெக்லஸ், 3 ஜோடி வைர கம்மல், 73 கிராம் எடையில் ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு லட்சம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 30.66 லட்சம்.

இது குறித்து போலீஸில் பத்மநாபன் புகார் அளித்தார். இதன்படி சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கொள்ளை கும்பலின் தடயங்கள் கிடைக்காமல் திரும்பிச்சென்றனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குல்லா, கையுறை அணிந்த இருவரின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

இதனால் இருவரையும் அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன், சிவரம்யா உள்பட 3 பேரின் வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பல் நகை, பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in