தங்கக்காசு மோசடி விவகாரம்: பெண் தொழிலதிபர் சொகுசு வீடு, அலுவலகங்களில் ரெய்டு

தங்கக்காசு மோசடி விவகாரம்:   பெண் தொழிலதிபர்  சொகுசு வீடு, அலுவலகங்களில் ரெய்டு

நாட்டை உலுக்கிய கியூ நெட் தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் பத்மா வீராச்சாமிக்கு சொந்தமான சொகுசு வீடு மற்றும் அலுவலகங்களில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு ஹாங்காங்கை தலைமை இடமாகக் கொண்ட கியூ நெட் என்ற நிறுவனம் இந்தியாவில் விஹான் டேரக்ட் செல்லிங்க் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் முதலீடுகளைத் திரட்டியது

எம்எல்எம் என்ற முறைப்படி பணத்தை வசூல் செய்து, மோசடியில் ஈடுபட்டதைக் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டு சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களைங்ச சேர்த்த பெண் தொழிலதிபர் பத்மா வீராச்சாமி கைது செய்யப்பட்டு சொத்துக்கள் சிபிசிஐடியால் முடக்கப்பட்டது.

அமலாக்கத்துறை இதுவரை 150 கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி நிறுவனம் மற்றும் நிர்வாகிகளிடம் முடக்கியுள்ளது. கடந்த 14 வருடமாக விசாரணை நடைபெற்று வந்தாலும், இந்த மோசடி தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் பத்மா வீராச்சாமிக்குச் சொந்தமான சொகுசு வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் வழக்குக்குத் தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in