தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!

தங்கம்
தங்கம்
Updated on
1 min read

ஆடி மாதம் முடிவடையவுள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ள இல்லதரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலை மேலும் கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,495 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 43,960 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.39 குறைந்து ஒரு கிராம் 5,456 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43,648 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து, 5,952 ரூபாய்க்கும், சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து, 47,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையில் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 75.70 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 75,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in