கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு!- மத்திய அரசு முக்கிய ஆலோசனை

மத்திய அரசின் ஜல்சக்தித்துறை செயலர், 5 மாநில அதிகாரிகளுடன் இன்று  ஆலோசனை
மத்திய அரசின் ஜல்சக்தித்துறை செயலர், 5 மாநில அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசின் ஜல்சக்தித்துறை செயலர், 5 மாநில அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் ஒருபக்கம் வறட்சி, ஒரு செழிப்பு இருந்து வருகிறது. இது பக்கம் இருந்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களுடன் நதிநீரை பங்கீட்டுக் கொள்வதில் பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நதிகளை இணைப்பதுதான் சிறந்தது என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கு பல அரசியல் கட்சிகளும், மாநிலங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய அரசின் ஜல்சக்தித்துறை செயலர் பங்கஜ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in