களையிழந்த திருமங்கலம் ஆட்டுச்சந்தை: 3.75 கோடிக்கு வியாபாரம் நடைபெறும் சந்தையில் விற்பனை சரிவு

களையிழந்த திருமங்கலம் ஆட்டுச்சந்தை: 3.75 கோடிக்கு வியாபாரம் நடைபெறும் சந்தையில் விற்பனை சரிவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவால் நஷ்டம் அடைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை ஆகும். எடைக்கேற்ப ஆடுகள் விலை போகும்.

இன்று நடந்த சந்தையில் வியாபாரிகள், ஆடுகளின் உரிமையாளர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சந்தைக்கு வந்தோர் கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகளை, அதன் உரிமையாளர்களிடம் வியாபாரிகள் நியாயமான விலை கோரவில்லை. இதனால், விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. ஒரு கிலோ கறி ரூ.550 என அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டதால், வியாபாரிகள் இழப்பை சந்திக்க நேரிட்டது.

பொங்கல் பண்டிகை முடிந்து அசைவ சமையலுக்குத் தேவையான ஆடுகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள பொதுமக்கள் நினைப்பால் ஆடு ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில்," வழக்கமாக 3.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெறும். ஆனால், இன்று 2.75 கோடி ரூபாய்க்கு தான் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் எங்களுக்குத்தான் நஷ்டம்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in