சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு உலகளாவிய டிஜிட்டல் அங்கீகாரம்

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு உலகளாவிய டிஜிட்டல் அங்கீகாரம்

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு மெடல், வெகுமதி போன்றவை டிஜிட்டல் அங்கீகாரமாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் விரிச்சுவல் ரியாலிட்டி மூலம் உலகிலேயே முதன்முறையாக உண்மையான சிலைகள் கொண்டு மியூசியத்தை உருவாக்கினர்.

அதனை தொடர்ந்து தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி புதிய முயற்சியாக சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு புதிய முறையில் அங்கீகாரத்தையும், பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 18-ம் தேதி திருவான்மியூரில் 15 சிலைகளை மீட்டதற்காக டிஎஸ்பி முத்துராஜ் மற்றும் மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் ரீகன் ,லட்சுமி காந்த் ஆகியோருக்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்காக NFT (non fungible token) எனப்படும் டிஜிட்டல் வெகுமதியை பரிசாக வழங்கியுள்ளார் .

குறிப்பாக nft எனப்படுவது குறிப்பிட்ட போட்டோ, வீடியோ, இசை உள்ளிட்ட விவகாரங்களை டிஜிட்டல் மையமாக மாற்றி உரிமை கோரி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு டிஜிட்டல் முறையில் சொத்துக்களாக மாற்றப்படும் பொருட்களை NFT உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சில குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் ஏலத்தில் விற்பனை செய்து கிரிப்டோ கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம்.

இதே முறையில் கடந்த ஜூலை மாதம் துபாய் நாட்டில் முதன் முறையாக காவலர்களுக்கு இது போன்று வெகுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது உலகத்திலேயே இரண்டாவது முறையாக டிஜிட்டல் வெகுமதியை தமிழக சிலைக்கடத்தல் பிரிவு காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி sbt ( soul bound token) டிஜிட்டல் மெடல் போன்று டிஜிட்டல் அங்கீகாரத்தை உலகத்திலேயே முதன் முறையாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கியுள்ளார். பிளாக் செயின் டெக்னாலஜி என்ற ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் இந்த டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாத்து விற்பனை செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in