`நண்பர்கள் முக்கியம் தான், அதனைவிட பெற்றோர் மிகவும் முக்கியம்'- மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ்

 நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராபெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நடிகை நயன்தாரா அட்வைஸ்

மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும்’’ என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் 35-வது ஆண்டு விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பேசிய நயன்தாரா, ‘’கல்லூரி வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கானது. நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள் ,யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. நல்லவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும்.

 நயன்தாரா
நயன்தாராபெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நடிகை நயன்தாரா அட்வைஸ்

கல்லூரி காலத்தில் நண்பர்கள் முக்கியம் தான். ஆனால் அதனை விட பெற்றோர் மிகவும் முக்கியம். அவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும் அது இன்னும் நம் வாழ்க்கையை அழகாக மாற்றும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in