நீலகிரி காதலியின் குடும்பத்தையே கொன்ற கேரள காதலன்: 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

கேரள காதலன்
கேரள காதலன் நீலகிரி காதலியின் குடும்பத்தையே கொன்ற கேரள காதலன்: 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

காதல் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அடித்து கொல்லப்பட்டனர். காதல் விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த லெனின் என்ற இளைஞர், தான் காதலித்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் பாட்டி என 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் லெனினை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் கடந்த 2017-ல் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லெனினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in