எச்சரித்த மகன்; ஒதுங்கிக்கொண்ட முறை தவறிய காதலி: விடாமல் துரத்திய காதலன் கொடூரக் கொலை!

கொலை
கொலை

குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று ஒதுங்கிக் கொண்ட பெண் தோழியை விடாமல் தொந்தரவு செய்த காதலனை, காதலியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி கண்மாய் ஒன்றில் கணேசன் நேற்று சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்குகாவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த துரைச்சி என்னும் பெண்ணுடன், கணேசனுக்கு முறைதவறிய உறவு இருந்துள்ளது. துரைச்சியை அவரது மகன் உள்ளிட்ட உறவினர்கள் இவ்விசயத்தில் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து மனம் திருந்திய துரைச்சி, கணேசனோடு உறவைத் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் துரைச்சியின் வீட்டிற்கு வந்த கணேசன் அவருடன் நெருக்கமாக இருக்க அழைத்திருக்கிறார். அதற்கு துரைச்சி மறுக்க, சப்தம் கேட்டு விழித்த துரைச்சியின் மகனும் கணேசனுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது கணேசன் அவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் கணேசன் உயிருடன் இருந்தால் நிம்மதியாக வாழ விட மாட்டார் என அவரைக் கொலைசெய்ய முடிவு செய்தார் துரைச்சி. அதனைத் தொடர்ந்து அவர் தன் உறவினர்களோடு சேர்ந்து அம்மிக்கல்லை தலையில் போட்டு கணேசனைக் கொலை செய்த துரைச்சி அவரது சடலத்தை கண்மாயில் போட்டது தெரியவந்தது.

துரைச்சியின் செல்போன் சிக்னல் நெல்லை மாவட்டம், பழவூரில் காட்டியது. அதன் அடிப்படையில் இன்று பழவூருக்கு விரைந்த போலீஸார் துரைச்சி உள்பட மூவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in