இரும்புக்கம்பியால் தாக்கி காதலனைக் கொலை செய்த காதலி: கூட்டாளியான புதுக்காதலனும் கைது

காதலன் அடித்துக் கொலை
காதலன் அடித்துக் கொலைஇரும்புக்கம்பியால் தாக்கி காதலனைக் கொலை செய்த காதலி: கூட்டாளியான புதுக்காதலனும் கைது

புதிதாக துணை கிடைத்த சந்தோஷத்தில் பழைய காதலனை இரும்புக்கம்பியால் அடித்து காதலியே கொலை செய்த சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம் துர்காபூர் மாவட்டத்தில் கோபால்மத் நகர் தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், வாலிபரின் உடல் நேற்று முன்தினம் இரவு கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்டு வாலிபர் துர்காபூர் பினாசிடி நாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அவினாஷ் ஜன்(19) என்பது தெரிய வந்தது. எதற்காக இந்த கொலை நடந்தது என போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது நைன் நகரைச் சேர்ந்த ஆப்ரீன் என்ற பெண்ணை அவினாஷ் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆப்ரீனை போலீஸார் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. தனது புதுக்காதலன் பிஜூபாராவைச் சேர்ந்த பிட்டு குமார் சிங்கியுடன் சேர்ந்து அவினாஷை ஆப்ரீன் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

பிட்டு குமாருடன் பழக்கம் ஏற்பட்டவுடன், பழைய காதலர் அவினாஷை ஆப்ரீன் புறக்கணித்துள்ளார். இதையறியாத அவினாஷ் தனது காதலியைப் தொடர்ந்து காதலித்துள்ளார். இதை இடையூறாக இருப்பதாக உணர்ந்த ஆப்ரீன், பிட்டு குமாருடன் சேர்ந்து அவினாஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத போது, அவினாஷை வரச்சொல்லியுள்ளார். அங்கு பிட்டு குமார் இருந்துள்ளார்.

அவினாஷிற்கு அளவிற்கு அதிகமான அளவில் மதுபானம் குடிக்க வைத்துள்ளனர். அப்போது இரும்பு தடியால் அவினாஷ் தலையில் ஆப்ரீன் அடித்துள்ளார். பாட்டிலால் பிட்டுகுமார் தாக்கியுள்ளார். இதனால் அவினாஷ் உயிரிழந்தார். இதையடுத்து அவரது கைகளைக் கட்டி அவரது உடலை தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் சேர்ந்து வீசிச்சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். காதலனை காதலியே புதுக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in