பிரேக் அப் ஆன காதல்; டார்ச்சர் கொடுத்த முன்னாள், இன்னாள் காதலர்கள்: உயிரை மாய்த்த இளம்பெண்

பிரேக் அப் ஆன காதல்; டார்ச்சர் கொடுத்த முன்னாள், இன்னாள் காதலர்கள்: உயிரை மாய்த்த இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள், இன்னாள் காதலன்களின் தொந்தரவினால் இளம்பெண் உயிரைவிட்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு இலங்கன்விளையைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது இரண்டாவது மகள் திவ்யா(20) பட்டதாரியான இவர் வீட்டி தனிமையில் இருக்கும்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.

மருதங்கோடு அருகே இலுப்பவிளையைச் சேர்ந்த ரஞ்சித்(20) என்பவருக்கும் திவ்யாவுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இவர்கள் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ஷெர்லின் புரூஸ் என்பவரோடு திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது காதலாக மாறியது. இதில் ரஞ்சித்துடனான காதல் பிரேக் அப் ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், திவ்யாவும் தானும் ஏற்கெனவே எடுத்திருந்த பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டுத் தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

இன்னொருபுறத்தில் ஷெர்லின் புரூஸ் மீண்டும் ரஞ்சித்தை போய் சந்தித்தாயா? எனக் கேட்டுத் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த மன உளைச்சலில் திவ்யா தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரத்தில் இன்னாள் காதலன் ஷெர்லின் புரூஸை போலீஸார் கைதுசெய்தனர். முன்னாள் காதலன் ரஞ்சித் கேரளத்திற்கு தப்பி ஓடிவிட்டார். போலீஸார் ரஞ்சித்தை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in