மதிப்பெண் குறைவால் கண்டித்த ஆசிரியர்: 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவியால் பரபரப்பு

மதிப்பெண் குறைவால் கண்டித்த ஆசிரியர்:  3-வது மாடியில் இருந்து குதித்த மாணவியால் பரபரப்பு

கணிதப் பாடத்தில் தோல்வி அடைந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், கங்கை நகரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 23 மதிப்பெண்கள் எடுத்து கணிதப் பாடத்தில் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து கணித ஆசிரியர் அந்த மாணவியைக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அந்த மாணவியை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாமல்லபுரம் அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் தேர்வின் போது காப்பியடித்ததை ஆசிரியர் கண்டித்த காரணத்தால் தற்கொலைக்கு முயன்றார். அதுபோல் கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக ஆசிரியர் கண்டித்ததால் கூடுவாஞ்சேரி தனியார்ப் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in