பாப் கட்டிங்குடன் வந்து பைக் திருடும் சிறுமி: வைரலாகும் வீடியோ

பைக் திருடும் சிறுமி
பைக் திருடும் சிறுமிபாப் கட்டிங்குடன் வந்து பைக் திருடும் சிறுமி: வைரலாகும் வீடியோ

சென்னையில் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறுமி பைக் திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிசிடிவியில் சிக்கிய சிறுமி
சிசிடிவியில் சிக்கிய சிறுமிபாப் கட்டிங்குடன் வந்து பைக் திருடும் சிறுமி: வைரலாகும் வீடியோ

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதே போல் நேற்று அதிகாலை, ஒரு இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார் வந்தது.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பாப் கட்டிங்குடன் வந்த சிறுமி, இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அந்த சிறுமி சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் அவர் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் திருடிச் சென்ற இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது, பெட்ரோல் தீர்ந்தவுடன் அங்கேயே சிறுமி விட்டு விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுமி அளித்த தகவலின் பேரில், வெவ்வேறு இடங்களில் இருந்து 4 இருசக்கர வாகனங்களை வண்ணாரப்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் சிறுமியை புரசைவாக்கம் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in