சிறுமியை கடத்தி வந்த கணவன்... வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை: வீடியோ எடுத்து மனைவி மிரட்டிய கொடூரம்

சிறுமியை கடத்தி வந்த கணவன்... வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை: வீடியோ எடுத்து மனைவி மிரட்டிய கொடூரம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கணவன், மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், புடான் மாவட்டத்தை சேர்ந்த ரிஷிகுமார் (27) என்பவருக்கும் சவீதா (24) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ரிஷிகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அந்த சிறுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ரிஷிகுமார்.

இதனிடையே, கடந்த 12-ம் தேதி சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்த ரிஷிகுமார், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது, ரிஷிகுமாரின் மனைவி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, இதை வெளியே கூறினால் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று கணவன்- மனைவி இரண்டு பேரும் மிரட்டியுள்ளனர். பயத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் சிறுமி கூறவில்லை.

இந்த சூழ்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர், விசாரித்துள்ளனர். அப்போது, தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்த பெற்றோர், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரிஷிகுமார் மற்றும் அவரது மனைவியை நேற்று கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in